லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஆஸி. படை களமிறங்குமா?
லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்தவதற்கு அமெரிக்கா உதவிகோரும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு ஆஸ்திரேலிய தீயணைப்பு படை தயார் நிலையில் உள்ளது.
இது தொடர்பில் வாஷிங்டனின் அழைப்புக்காக கன்டாரா காத்திருப்பதாக தெரியவருகின்றது.
குறித்த தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. சுமார் 30 ஆயிரத்துக்கு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
குறித்த காட்டுத் தீயில் ஐவர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடிவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்பட்டவேளை அதனை கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்கா உதவுpகளை வழங்கி இருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தற்போது தமது நாடும் உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.