மெல்பேர்ணின் தென்கிழக்கு பகுதியில் சிறுவன் ஒருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஐந்து சிறுவர்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதியே 17 வயது சிறுவனை குறித்த சிறார் கும்பல் தாக்கியுள்ளது.
ஐவரும் இணைந்து பாதிக்கப்பட்ட சிறுவனை கத்தியால் வெட்டியுள்ளனர் எனவும், இதனால் அதிகளவு இரத்தம் வெளியேறியுள்ளது எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலின் பின்னர் சிறார்கள் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த சிறுவன், ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 14 மற்றும் 17 வயதுகளுக்கிடைப்பட்ட சிறார்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஏற்கனவே சில குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் சிறார் நீதிமன்றத்தில் இவர்கள் முற்படுத்தப்படவுள்ளனர்.