அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி ஆஸ்திரேலியர் ஒருவரும் பலியாகியுள்ளார்.
32 வயதான ரோரி சைக்ஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரிட்டனின் தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி இவர் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரமாவார்.
1990களில் கிடிகப்பெர்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி பிரபலமான ரோரி சைக்ஸ், மாலிபுவில் உள்ள அவரது பங்களாவில் கார்பன்மொனாக்சைட் வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
பெருமூளைவாத நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை காட்டுதீயிலிருந்து காப்பாற்றுவதற்கு தான் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என தாயார் ஷெலி சைக்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த 7 ஆம் திகதி ஏற்பட்ட காட்டுத் தீ மளமளவென 50,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. இதில் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவு முழுமையாக தீயில் எரிந்திருக்கிறது.
சுமார் 7,500 தீயணைப்பு படையினர், ஏராளமான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தண்ணீர் பற்றாக்குறை, தீயணைப்பு படையினர் ற்றாக்குறை, காற்றின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தீயை அணைக்கும் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
காட்டுத் தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை. ஏராளமானோர் தீக்காயம் அடைந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.