மெல்பேர்ணில் நேற்றிரவு கத்தி முனையில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 15 வயது சிறுவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணொருவரும், குறித்த சிறுவனும் நபரொருவரை அணுகி, கார் சாவியை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதன்போது குறித்த சிறுவன் கத்தியைக்காட்டி காரின் உரிமையாளர்மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் காயமடைந்த 39 வயது நபர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை வேட்டையில் இறங்கிய பொலிஸார், இன்று மதியம் 15 வயது சிறுவனை கைது செய்தனர். பெண் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்கின்றது.