போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்களை கடத்திய நபர் பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடிலெய்டு விமான நிலையத்தில் வைத்தே 39 வயதான குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கொண்டுவந்த பைகளை சோதனைக்குட்படுத்தியபோதே அவற்றுள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.