தான் இவ்வாரம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதை ஆஸ்திரேலிய சட்டமா அதிபர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் விரிசல் அடைந்துள்ள இராஜதந்திர உறவுகளை சீர்செய்யும் நோக்கிலேயே அவரது விஜயம் அமையவுள்ளது.
இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு ஆஸ்திரேலியா முழுமையான ஆதரவை வழங்கும் எனவும்இ இஸ்ரேல் தரப்புடனான சந்திப்பின்போது இது பற்றி விளக்கமளிக்கப்படும் எனவும் சட்டமா அதிபர் மார்க் ட்ரேஃபஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளைஇ சட்டமா அதிபரின் இஸ்ரேல் பயணத்துக்கு லேபர் கட்சியின் பாலஸ்தீன ஆதரவு உறுப்பினர்கள் சிலர் இணக்கம் தெரிவிக்கவில்லை என அறியமுடிகின்றது.