ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக தேசிய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அல்பானீஸி அரசால் யூத எதிர்ப்புக்கான சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்ட ஜிலியன் செகல் என்பவரே இதனை வலியுறுத்தியுள்ளார்.
மெல்பேர்ண் மற்றும் சினிட் ஆகிய பகுதிகளில் யூத வழிபாட்டு தலங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையிலேயே மேற்படி வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நியூ சவூத் வேல்ஸ் மற்றும் விக்டோரிய மாநில பிரீமியர்களுடன், இது தொடர்பில் பிரதமர் கலந்துரையாடியுள்ளதை யூத தூதுவர் ஜிலியன் செகல வரவேற்றுள்ளார். இது சிறந்த முதல்படி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் ஆளுங்கட்சி பக்கம் இருந்து இன்னும் பதில் வழங்கப்படவில்லை. எனினும், தேசிய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் வலியுறுத்தியுள்ளார்.