உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போரிட்ட நிலையில் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பிரஜை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ஒஸ்கார் ஜென்கின்ஸ், கைது செய்யப்பட்ட தினத்தன்றே கொல்லப்பட்டுள்ளார் என்று அவருடன் போர்களத்தில் இருந்த சக படையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இது தொடர்பில் உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மெல்பேர்ணை சேர்ந்த ஒஸ்கார், கடந்த டிசம்பர் மாதம் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான காணொளியும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இது விடயத்தில் ரஷ்யா நடக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தி இருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே போர்க்கைதி கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து இதுவரையில் உக்ரைனுக்காக போரிட்ட ஏழு ஆஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.