ஆஸ்திரேலிய பிரஜையான ஒஸ்காருக்கு ரஷ்யாவால் ஏதேனும் தீங்கு இழைக்கப்பட்டிருந்தால் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் உக்ரைன் தூதுவருடன் தான் கலந்துரையாடி உள்ளதாகவும், ஒஸ்கார் ஜென்கின்ஸின் நிலை குறித்து ரஷ்யா தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ஒஸ்கார் கொல்லப்பட்டிருந்தால், ரஷ்ய தூதுவரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் இடித்துரைத்துள்ளார்.
ஒஸ்காரின் நிலைமை பற்றி அறிவதற்காக தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெளிவிவகார அமைச்சர் அந்தோனீ அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.