சிட்னி வடக்கு பகுதியிலுள்ள கடற்கரைகளில் உருண்டை வடிவிலான மர்மப்பொருள்கள் கரையொதுங்கியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணை மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.
சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலான மேற்படி மர்மப்பொருள்களால், குயின்ஸ்க்ளிப், ப்ரெஷ்வாட்டர், நார்த் கர்ல் ;, நார்த் ஸ்டெய்ன் மற்றும் நார்த் நரபீன் கடற்கரைகள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீள திறக்கப்பட்டுள்ளன.
எனினும், இன்றும் மர்மப்பொருள் கரையொதுங்கிய டீ வை மற்றும் சவுத் கர்ல் கர்ல் ஆகிய இரண்டு கடற்கரைகள் மாத்திரம் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மர்மப்பொருள் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கூகி மற்றும் ப்ரோண்டே உள்ளிட்ட பல கிழக்கு புறநகர் கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மர்மப்பொருள் கரை ஒதுங்கிய நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.