AustraliaCommunity

பெண்ணின் சடலத்தை கழிவு தொட்டிக்குள் போட்ட சந்தேக நபர் கைது!

மெல்பேர்ண் வடக்கு பகுதியில் கழிவு தொட்டியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட 67 வயதான பெண் இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை, எனினும், அவர் Coolaroo பகுதியை சேர்ந்தவரெனவும், கைது செய்யப்பட்டுள்ள ஆணுக்கு தெரிந்தவராக இருக்ககூடும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழிவு மேலாண்மை ஊழியர்களாலேயே குறித்த பெண்ணின் சடலம் குப்பை தொட்டியில் கிடப்பதை கண்டு, அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

Related Articles

Back to top button