others

பிரிஸ்பேன் விபத்தில் ஐவர் படுகாயம்!

பிரிஸ்பேன் தென்மேற்கு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 10.10 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டதால் Mercedes-Benz காரின் சாரதி, 22 வயதான இரு ஆண் பயணிகள் மற்றும் 20 வயதான பெண்ணொருவரும் படுகாயமடைந்தனர்.

Landcruiser காரின் 52 வயதான பெண் சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.

Related Articles

Back to top button