others

சிட்னியில் முதியவரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

தென்மேற்கு சிட்னியில் 92 வயது முதியவரொருவரை தாக்கினர் எனக் கூறப்படும் இரு பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.

கடந்த ஜனவரி 21 ஆம் திகதியே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலுடன் பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

தாக்குதலில் முதியவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டது.இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் உள்ளக விசாரணைiயை நடத்தினர்.

இதில் இரு பொலிஸ் அதிகாரிகள் தொடர்புபட்டமை தெரியவந்துள்ளது.

ஜுலை 30 ஆம் திகதி ஒருவரும், மற்றைய அதிகாரி ஆகஸ்ட் 06 ஆம் திகதியும் இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர்.

அத்துடன், இரு அதிகாரிகளும் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரியவருகின்றது.

Related Articles

Back to top button