others

பிரிட்டனில் ஆட்சிமாற்றம்: AUKUS திட்டத்துக்கு ஆபத்தா?

பிரிட்டனில் ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையிலான வலுவான உறவு தொடரும் என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

AUKUS பாதுகாப்பு ஒப்பந்தம் சார்ந்த விடயங்களும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.

லேபர் கட்சி வெற்றிநடை போட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் Starmer பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையிலேயே Starmer ஐ தனக்கு நன்கு தெரியும் எனவும், அவரை பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளதாகவும் பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.

அத்துடன், Rishi Sunak வுடன் தான் ஆக்கப்பூர்வமாக பணியாற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ இரு நாடுகளுக்கும் இடையில் சிறந்த உறவு உள்ளது, ஒருமித்த நிலைப்பாடு காணப்படுகின்றது, எனவே, அந்த நல்லுறவு மேலும் வலுப்பெறும்.” – எனவும் ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related Articles

Back to top button