Sri Lanka

அரசாங்கத்திற்கு எதிராகுமா கூட்டமைப்பு?

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக அல்லது எதிராக வாக்களிப்பது என்பது தொடர்பான முடிவினை எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் கூடி ஆராயவுள்ளனர்.

நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடுகின்றது. அதேபோல இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை மற்றும் நாளை மறுதினம் விவாதம் நடத்தப்பட்டு நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா என்று இதுவரை தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இன்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கூடி தீர்மானம் எடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button