ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான கட்சியின் குழுவொன்று, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய கலாசார உறவுகள் பேரவையின் அழைப்பின் பேரில், இந்தக் குழுவினர் இன்று காலை புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் செல்லவுள்ளதுடன், அங்கு அந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடனும் கலந்துரையாடலை நடத்தவுள்ளனர்.
இந்தப் பயணத்தின் போது, விவசாயம், தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான மையங்களையும் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், கி.செல்வராஜ் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.