சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்தமை மற்றும் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்லேகம ஹேமரதன தேரர், வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டார்.
கொழும்பு கோட்டை நீதவானின் உத்தரவிற்கு அமைய, தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.