யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (18) நடைபெற்றது.
சான்று பொருள்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் ,பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியில் இதுவரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.