யாழ்ப்பாண நகருக்கு அருகில் உள்ள பிரதான வீதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில், அர்ச்சுனா இராமநாதன் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதாகவும், சபை நாகரிகமின்றிச் செயல்பட்டுக் கூட்டங்களைக் கலைப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், நேற்று (18) நடைபெற்ற தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர் மிக மோசமான வார்த்தைகளைப் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டார். இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில்தான், யாழ்ப்பாணப் பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த அவரது பிரம்மாண்ட பதாகைக்கு இனந்தெரியாத யாரோ செருப்பு மாலை அணிவித்துத் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.