யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது.
இந்த அகழ்வின் போது, 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இதையடுத்து, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது.
அவற்றில் 370 எலும்புக் கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.