'நினைவேந்தலில் பங்கேற்ற தமிழ் எம்.பிக்கள் குறிவைப்பு'

banner

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. இது தொடர்பில் சட்டமா அதிபரிடம், பொலிஸார் சட்டவிளக்கம் கோரியுள்ளனர்.





நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும்போது வழங்கிய உறுதிமொழியை மீறும் வகையில் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதால் அவர்கள் விடயத்தில் எவ்வாறு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே விளக்கம் கோரப்பட்டுள்ளது என பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.





அதேவேளை, புலிகள் உறுப்பினர் ஒருவருக்கான நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சுமந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடைஉத்தரவை பிறப்பித்திருந்தாலும் அதனைமீறும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.