நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை மிரட்டும் 'ஒமிக்ரோன்' - தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்களும் பலி!

banner

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இவ்வாரம் ஓமிக்ரோன் அலை உச்சத்தை எட்டும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், ஒமிக்ரோன் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த இரண்டு நாட்களில் 25 பேர் பலியாகியுள்ளனர்.





அவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர் ஒருவரும் உள்ளடங்குகின்றார். அவர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றிருந்தவர். எனினும், நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்டிருந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என மருத்து வட்டாரங்கள் தெரிவித்தன.





அத்துடன், உயிரிழந்தவர்களில் 16 பேர் தடுப்பூசியின் குறைந்தது இரண்டு டோஸ்களைப் பெற்றுள்ளனர், ஒருவர் ஒரு டோஸைப் பெற்றிருந்தார். ஏனைய எட்டு பேர் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவில்லை.





அதேவேளை, 30 ஆயிரத்து 825 வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 178 பேருக்கு என்டிஜன்ட் பரிசோதனைமூலமும், 17 ஆயிரத்து 647 பேருக்கு பிசிஆர் பரிசோதனைமூலமும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





அதேவேளை, நீயூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், இந்த வாரம் ஒமிக்கிரோன் அலை உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.