ஆஸி. சிறுமிக்கு ஆபாச கணொலி அனுப்பிய கனேடிய பிரஜைக்கு 4 ஆண்டுகள் சிறை

banner

14 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்த கனடிய பிரஜைக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





கனடாவைச் சேர்ந்த Michelangelo Pereira Huezo 36 வயது என்பவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் 2018ஆம் ஆண்டு Discord செயலி ஊடாக தொடர்பை ஏற்படுத்தி , சிறுமியை திருமணம் செய்யும் நோக்குடன் பேர்த்துக்கு வந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.





சம்பந்தப்பட்ட நபர் 2018 ஆம் ஆண்டு Discord செயலி ஊடாக சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தி ஆபாச தகவல்களை அனுப்பியுள்ளார்.





"நீ கூலாக எதையாவது பார்க்க விரும்புகிறாயா.." என சிறுமியிடம் கேட்ட போது, சிறுமி சரி என்றதும், தனது நிர்வாண படத்தை அனுப்பியுள்ளார் . அத்துடன் தான் குளியலறையில் நின்று சுய இன்பம் அனுபவிக்கும் காணொளியையும் அனுப்பி விட்டு சிறுமியை தன்னுடன் ஆபாசமாக உரையாடுமாறு கேட்டுள்ளார் .





சிறுமி இவருடன் உரையாடுவதை சிறுமியின் சகோதரி அவதானித்துள்ளார்.





சிறுமியை தனது இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்று பரிசுப்பொருட்களை வழங்கி தவறான முறையில் நடந்துள்ளார்.





குற்றம் சுமத்தப்பட்டவரின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் இணையம் மூலம் வேலைவாய்ப்புத்தேடியே அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாக நீதிமன்றில் கூறியுள்ளார்.





வழக்கை விசாரித்த மேற்கு அவுஸ்திரேலிய மாவட்ட நீதிமன்றம் குற்றவாளிக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.