பயணத்தடை நீக்கம் – மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது சிட்டி விமான நிலையம்!

banner

ஆஸ்திரேலியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, சிட்னி விமான நிலையம் இன்று ஆனந்தக் கண்ணீர் குளமாக காட்சியளித்தது.





சுமார் 50 விமானங்களில் பயணிகள் சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கினர்.





வந்து இறங்கிய பிரயாணிகளை அவர்களது உறவினர்களும் நண்பர்களும் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர்.
“இந்த அரவணைப்புக்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன்.” என தனது பேரனைத்தழுவிய படி Charlotte என்ற சிறுமி தெரிவித்தார்.





Ben Evans தனது மூன்று மாதக்குழந்தையை பார்ப்பதற்கு இரண்டு வருடங்கள் காத்திருந்தார். இவருடன் இவரது சகோதரிகளும் இன்டர்நெட் தொடர்பில் காத்திருந்தனர். இவர் 1998 முதல் 2004 வரை ஆஸ்திரேலியாவுக்காக றக்பி போட்டிகளில் பங்கு பற்றியவர்.





2020 மார்ச்சில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அவுஸ்திரேலிய அரசு பயணத்தடை விதித்திருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் அவுஸ்திரேலியர்களும் வேறு சிலரும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு அனுமதி வழங்கியிருந்தது. எனினும் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.