'தலைமறைவான கொலைக்குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பிறகு கைது'

banner

Graham Potter, என்ற 64 வயது கொலைக்குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குயீன்ஸ்லாந்திலிருந்து ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் வைத்தே, அவர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.





1981 ஆம் ஆண்டு பதின்ம வயது சிறுமி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 15 வருடங்களின் பின்னர் இவர் விடுதலை செய்யப்பட்டார்.





எனினும், அவர் சட்டத்துக்கு கட்டுப்படவில்லை. தொடர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டார். 440 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியுடைய கொக்கெயின் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் கொலைக்குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தன. பொட்டர் மீது மேலும் பல ஊர்ஜிதம் செய்யப்படாத குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.





எனவே, பொட்டரைப்பற்றிய தகவல் வழங்குவோருக்கு ஒரு இலட்சம் டொலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.





இதனால் பொட்டர் தனது தோற்றத்தை மாற்றும் பொருட்டு டை பாவித்து சிகையலங்காரத்தை மாற்றியதுடன் தனது நடை உடை பாவனை என்பவற்றையும் மாற்றியிருந்தார். 12 ஆண்டுகள் அவர் சிக்கவில்லை. இந்நிலையிலேயே தற்போது கைதாகியுள்ளார்.





இன்று செவ்வாய்க்கிழமை பொட்டர் விக்ரோறியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.