கோதுமை மா தட்டுப்பாடு - பேக்கரி உற்பத்தி பாதிப்பு

banner

கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாண் உட்பட பேக்கரி உற்பத்திகளை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.





திருகோண மலையிலிருந்து கொழும்புக்கு 50 கிலோ கோதுமை மா மூடையொன்றை எடுத்து வருவதற்கு 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.





இதேபோல் கடந்த காலங்களில் திருகோண மலையிலிருந்து மருதானை வரை ரயில் மூலம் கோதுமை மா எடுத்து வரப்பட்டது. தற்போது ரயில் மூலம் கோதுமை மா எடுத்து வரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.