குடு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

banner

சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர், கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.





குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரியெனவும், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.





83 கிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.





சந்தேக நபரான பெண் கிராண்ட்பாஸ், பிரதேசத்தில் உள்ள மாடி வீடொன்றில் வசிக்கும் 40 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.