யாழிலிருந்து கதிர்காமத்துக்கு விசேட பஸ் சேவை

banner

வரலாற்று சிறப்புமிக்ககதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பாகி இடம்பெறும் நிலையில், இலங்கை போக்குவரத்து சபையினரால் யாழில் இருந்து கதிர்காம கந்தன் ஆலயத்திற்கான விசேட பேருந்து சேவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.





இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை முகாமையாளர் குணசீலன் இந்த தகவலை வெளியிட்டார்.





எதிர்வரும் 12 ம் திகதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 5 .15 மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்படும் எனவும் கதிர்காமம்செல்ல விரும்பும் பக்தர்கள் குறித்த பேருந்து சேவையினை பயன்படுத்துமாறும் அவர் அறிவித்துள்ளார்.