உலகில் பட்டினியால் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை!

banner
உலகில்  பட்டினியால் வாடும்  நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. 

உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச நாணய நிதியம் , இலங்கையானது  கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. 

உலக உணவுத் திட்டத்தால்,  கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில்,    முதல் தடவையாக பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டிருந்தது. 

 இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையிலும்,  இலங்கை பட்டினி பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச நாணய நிதியமும் இவ்வருடம் அக்டோபர் மாதம் முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை உட்பட 19 நாடுகளில் உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உணவு பாதுகாப்பற்ற நிலை காணப்படும் நாடுகளில் ஆப்கானிஸ்தான், எதியோப்பியா, நைஜீரியா, தென் சூடான், சோமாலியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. இலங்கையும் இந்த அபாய கட்டத்தை நெருங்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.