ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் வடக்கில் 317 பேர் மட்டுமே தெரிவு

banner

ஒரு இலட்சம் பேருக்கான வேலை வாய்ப்புத் திட்டத்தில் இன்று முதல் கட்டமாக வழங்கும் 34 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 317 பேர் மட்டுமே உள் வாங்கப்பட்டுள்ளனர்.





க.பொ.த சாதாரணம் வரையில் கல்வி கற்ற ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பிற்காக பல இலட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் வடக்கு மாகாணத்தில் இருந்தும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.





இதில் 13 ஆயிரத்து 400 பேருக்கு நியமனம் கிடைக்கும் என முதலில் தெரிவித்த போதும் பின்னர் ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு 10 பேர் என்ற அடிப்படையில் வடக்கிற்கு 9 ஆயிரத்து 300 பேர் அளவிலேயே நியமனம் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டது.





இந்நிலையில் முதல் கட்டமாக இன்று 34 ஆயிரம் பேருக்கான நியமனம் வழங்கப்பட்டு இவர்களிற்கு 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நேரலை மூலமான பரீட்சைகள் இடம்பெற்றே எத்துறையிலான பணி எனத் தீர்மானிக்கப்படவுள்ளது. இவ்வாறு நியமனம் வழங்கும் 34 ஆயிரம் பேரில் வடக்கின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 96 பேருக்கும், வவுனியாவில் 112 பேருக்கும், முல்லைத்தீவில் 55 பேருக்கும், மன்னாரில் 42 பேருக்கும் வழங்கப்படவுள்ளதோடு கிளிநொச்சியில் 12 பேருமாக மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.