'டபள் கேம் ஆடவேண்டாம்' - ஹக்கீமை விளாசித் தள்ளிய கிரியல்ல

banner

" ரணில் விக்கிரமசிங்கவிடம் போட்ட ஆட்டத்தை எங்களிடம் போடவேண்டாம். '20' விடயத்தில் நீங்கள் இரட்டை வேடம் போடுவது எங்களுக்கு நன்கு தெரியும்." இவ்வாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை, விளாசித் தள்ளியுள்ளார் எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல.





'20' ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த ரவூப் ஹக்கீமுக்கும், கிரியல்லவுக்குமிடையில் கடும் சொற்போர் இடம்பெற்றது.





'20' மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு தனக்கு மேலதிக நேரம் வேண்டும் என ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தவேளையிலேயே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.





முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலர் '20' இற்கு ஆதரவு வழங்கவுள்ளமை அறிந்துகொண்டதாலேயே லக்‌ஷ்மன் கிரியல்ல கொதிப்படைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. சொற்போர் தீவிரமடைய ஒரு கட்டத்தில் 'டகள் கேம்' ஆடவேண்டாம் என சொற்கணை பறந்ததாகவும் தெரியவருகின்றது.





அதேவேளை, கடந்த பொதுத்தேர்தலின்போது கண்டி மாவட்டத்தில்தான் இவ்விருவரும் போட்டியிட்டனர். இதன்போதும் ஹக்கீமை கிரியல்ல கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.