' 21/4 தாக்குதல் நடந்த அந்தோனியார் தேவாலயத்துக்கு செல்கிறார் அமெரிக்க இராஜாங்க செயலர்'

banner

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றிரவு 7.55 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார். சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பளிக்கப்பட்டது.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் அவர் நாளை ( 27) இராஜதந்திர சந்திப்புகளில் ஈடுபடுவார். அதன் பின்னர் கூட்டு ஊடகவியலாளர் மாநாடும் நடைபெறவுள்ளது.





அதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் செல்லவுள்ளார்.