'நினைவேந்தல் உரிமையை பறிக்ககூடாது'

banner

" நினைவேந்தல் உரிமை மறுக்கப்படக்கூடாது. போரால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு வழங்கப்படவேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே, புலிகளின் பெயர், கொடி மற்றும் கொள்கையை முன்னிலைப்படுத்தி நினைவேந்தல் நடத்தமுடியாது. அதற்கு சட்டத்திலும் இடமில்லை. ஆனால் போரால் உயிரிழந்த, அவர் போராளியாகக்கூட இருக்கலர். அவரை நினைவுகூருவதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது.





தெற்கில் நினைவேந்தலை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ஒரே நாடு - ஒரே சட்டம் என்பதுதான் இந்த அரசாங்கத்தின் கொள்கையெனில் வடக்கில் ஏன் அனுமதி மறுக்கப்படுகின்றது. அவ்வாறு மறுக்கப்படக்கூடாது. அனுமதி வழங்கப்படவேண்டும்." - என்றார்.





அதேவேளை, மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.