'வெளிநாட்டிலுள்ள புலி ஆதரவாளர்களுக்கு வலை'

banner

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக சர்வதேச ரீதியில் நிதி திரட்டுதல் உள்ளிட்ட உதவிகளை வழங்கும் நபர்கள் குறித்து விசாரணைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.





பொலிஸ் புலனாய்வு பிரிவு, இரகசிய பொலிஸார், சர்வதேச பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.





பல்வேறு நாடுகளில் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கி வரும் நபர்கள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,





" தடை செய்யப்பட்ட அமைப்பொன்றுக்கு ஆதரவாக செயற்படுகின்றமை சட்டவிரோதமானது. இதன்படி, சர்வதேச பொலிஸார் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுடனும் கலந்துரையாடல்களை நடத்த எதிர்ப்பார்க்கின்றோம். வெளிநாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கும் நபர்கள் மற்றும் அவர்களுடன் இலங்கையர் யார் யார் தொடர்புகளை பேணி வருகின்றனர் என்பது தொடர்பிலும் ஆராயப்படும். இவ்வாறு தொடர்புகளை பேணுவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தகவல்கள் அத்தியாவசியமானவை. மேலும், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவோர் குறித்து, பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன." - என்றார்.