மன்னார் காற்றாலை திறப்பு விழாவுக்கு கூட்டமைப்புக்கு அழைப்பு இல்லை

banner

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.





இலங்கையின் விசாளமான காற்றாலை மின் உற்பத்தின் நிலையம் இன்று (8) மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது.





மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.





மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின் உற்பத்தி மையம் அமைந்துள்ளது. எனினும், இந்நிகழ்வுக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.





" வடக்க, கிழக்கில் மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயார். கூட்டமைப்பு என்பது அபிவிருத்திக்கு எதிரான கட்சி அல்ல. கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கை காட்டி தெற்கும் அபிவிருத்தி செய்யப்பட்டது என்பதையும் மறக்ககூடாது.





கூட்டமைப்பு அபிவிருத்தியை எதிர்க்கின்றது என்கின்றனர். ஆனால் காற்றாலை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு அழைப்பு விடுக்காமல் எவ்வாறு செல்வது?" - என்றார் சிறிதரன் எம்.பி.