ஐ.தே.கவை மீள கட்டியெழுப்புவோம் - புதிய பொதுச்செயலாளர் சூளுரை

banner

1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய தேசியக்கட்சி பலமாக இருந்தது. வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து தொகுதிகளிலும் அமைப்பாளர்கள் இருந்தனர். அதேபோன்றதொரு நிலைக்கு கட்சி மீண்டும் கட்டியெழுப்படும் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.





ஐக்கிய தேசியக்கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





” கட்சியை பலப்படுத்துவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டு, அதன்பிரகாரம் நாடு முழுவதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக தற்போதைய அரசு ஜனநாயக விரோத வழியில் பயணிக்கின்றது. அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் எமது அரசியல் பயணம் தொடரும்.





ஐக்கிய தேசியக்கட்சி என்பது இன, மத, மொழி, குல பேதங்களுக்கு அப்பால் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு முன்நோக்கி பயணிக்ககூடிய கட்சியாகும். 1977 ஆம் ஆண்டில் நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக்கட்சிக்கென தொகுதி அமைப்பாளர்கள் இருந்தனர். அதேபோன்றதொரு நிலைமையை உருவாக்குவோம்.





அத்துடன், கட்சியின் அடுத்தக்கட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக விசேட ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டு, அதன் ஊடாக அறிவிக்கப்படும்.” என்றார்.