21 ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்படுமா? வெளியானது அறிவிப்பு

banner

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி தளர்த்தப்படுமா என்பது தொடர்பில் 19 அல்லது 20 ஆம் திகதியளவிலேயே முடிவு எடுக்கப்படும் – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.





அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பயணத்தடை நீக்கம் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





” 21 ஆம் திகதி பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. ஆனால் அது பற்றி தற்போதே முடிவெடுக்க முடியாது. அனைத்து காரணிகள் பற்றியும் ஆராயவேண்டும். அந்தவகையில் 19 அல்லது 20 ஆம் திகதியளவில் தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.