'மாகாண தேர்தல் வேண்டாம்' - விமலின் கட்சி பரிந்துரை

banner

இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி யோசனை முன்வைத்துள்ளது.





சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற விசேட குழு கூடியபோதே தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மேற்படி யோசனையை முன்வைத்தார்.





புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சிமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளின் சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்ற வேண்டும் எனவும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.





அவ்வாறு மாற்றப்படும் அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்புடைய அதிகாரங்களை மாத்திரம் வழங்க வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.





அத்தோடு அதன் மூலம் மாகாண சபை தேர்தலை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டியுள்ளது.





தேசியப் பட்டியலின் மூலம் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களில் 5 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி பரிந்துரைத்துள்ளது.