சம்பந்தனின் கோட்டையில் கூட்டமைப்பின் 'பட்ஜட்' தோற்கடிப்பு

banner

திருகோணமலை, வெருகல் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.





2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் க. சுந்தரலிங்கத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.





மொத்த உறுப்பினர்கள் 13 பேரில் 06 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் 07 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.





இதற்கமைய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த வெருகல் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.