'இந்தியா சென்று பயன் இல்லை - வாங்க பேசுவோம்' - கம்மன்பில அழைப்பு

banner

13 ஆம் திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனைத் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட வேண்டுமே தவிர, இந்தியாவிடம் முறையிடக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. 





வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து   இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன.  





இது தொடர்பாக  நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டது. 





இதற்கு பதிலளித்த உதய கம்மன்பில, இலங்கை இறைமை உள்ள நாடு என்ற அடிப்படையில், 13ம் திருத்தச் சட்ட அமலாக்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாக இருந்தால் தமிழ் சகோதரர்கள் ஜனாதிபதியிடமே முறையிட்டிருக்க வேண்டும் . மாறாக இந்தியாவிடம் அதனைக் கொண்டு செல்லக்கூடாது." - என்றார்.