மின்வெட்டு குறித்து வெளியான புதிய அறிவிப்பு

banner

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று மதியம் தெரிவித்தார்.





ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னரே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.





எரிபொருள் பிரச்சினையால் நாட்டில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன.





இன்று ஒரு மணிநேரமும், நாளை முதல் இரு மணிநேரமும் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.





எனினும், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான டொலர்களை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், மத்திய வங்கி ஆளுநருக்கு பணிக்கப்பட்டுள்ளது.





இதன்படி மின்சக்தி அமைச்சுக்கு, எரிபொருளை வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.