நாடாளுமன்ற கொத்தணியா? மற்றுமொரு அமைச்சருக்கு கொரோனா

banner

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.





இதேவேளை, நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன ஆகியோருக்கு கொவிட் தொற்றுறுதியாகியிருந்தது.





நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான பின்னர், எம்.பிக்கள் தொடர்ச்சியாக தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.





அமைச்சர் சரத் வீரசேகர, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஆகியோருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.