ரஷ்யாவின் ஏவுகணைக் கப்பலை தாக்கியது உக்ரைன்!

banner

ரஷ்யக் கடற்படையின் கருங்கடல் பகுதிக்கான முதன்மைப் போர் கப்பல் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் பலத்த சேதமடைந்துள்ளதாக மொஸ்கோ அறி வித்துள்ளது. அதிலிருந்த வீரர்கள்
அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.





கப்பலில் நிகழ்ந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்ற விவரங்கள் உறுதிப்படுத் தப்படவில்லை. கப்பல் கடற்கண்ணியில் சிக்கியதாகவும், ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானதாகவும் முரண்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.





கப்பலை ஏவுகணை கொண்டு தாக்கியதாக உக்ரைன் உரிமை கோரியுள்ளது.





"மொஸ்க்வா" (cruiser Moskva) என்னும் ஏவுகணை செலுத்தும் கப்பலே தாக்கு தலுக்கு இலக்காகியுள்ளது. கப்பல் தீப் பற்றி எரிவதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.





வெடிப்பை அடுத்துத் தீ மூண்டதற்கான காரணத்தை அறிய விசா ரணைகள் நடத்தப்படுவதாக ரஷ்யாவின்
பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.





186 மீற்றர் நீளம் கொண்ட அந்தக் கப்பலில் 510 கடற்படையினர் தங்கியிருந்தனர் என்றும், மீட்புப் படைகளால் கப்பலை
நெருங்க முடியாதிருப்பதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.





"மொஸ்க்வா" 1980 இல் சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்ட பெருமைக்குரிய ஏவுகணை செலுத்தும் கப்பல் ஆகும். ஆரம்பத்தில் "ஸ்லாவா" (Slava) எனப் பெயரிடப்பட்ட அது பின்னர் "மொஸ்க்வா" என மாற்றப்பட்டது.





(Moskva - Moscow). 2000 ஆம் ஆண்டில் ரஷ்யா வின் கருங்கடல் கடற் பிரிவின் பிரதான கப்பலாகப் பணிக்கு கொண்டுவரப்பட்டிருந்த மொஸ்க்வா, 2015 இல் சிரியப் போரில் முக்கிய பங்குவகித்திருந்தது.





உக்ரைனின் மரியுபோல் நகர் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள சமயத்தில் போர்க் கப்பல் தாக் கப்பட்டிருக்கிறது. கடந்த ஐம்பது நாட்கள் நீடிக்கின்ற படையெடுப்பில் குறிப்பிடக் கூடிய முன்னேற்றம் எதனையும் எட்டாத நிலையில் உள்ள ரஷ்யப் படைகளுக்கு போர்க் கப்பல் மீதான தாக்குதல் மேலும் ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.





பாரிஸிலிருந்து குமாரதாஸன்