'மின்னல் வேகப் பதிலடியை கொடுப்போம்' - மேற்குலகத்துக்கு ரஷ்யா எச்சரிக்கை

banner

உக்ரைனில் ஏற்றுக் கொள்ள முடியாத வெளியார் தலையீடுகளுக்கு"மின்னல்" வேகத்தில் பதிலடி தரப்படும். அதற்கானதீர்மானங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.





ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்கு வழங்கிய உரையில் இவ்வாறு மேற்கு நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.





ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் (Gazprom) போலந்து மற்றும் பல்கேரியாவுக்கான எரிவாயு விநியோ கத்தை நிறுத்தும் அறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்தில் புடினின் இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது.





"வெளியில் இருந்து தலையிட்டு ரஷ்யாவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அச்சு றுத்தல்களை உருவாக்க யாராவது நினைத்தால், எங்கள் பதில் வேகமாகவும் மின்னல் போலவும் இருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்," என்று விளாடிமிர் புடின் கூறினார்.





அவரின் கூற்றுப்படி, ரஷ்யா தனது அதி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயங்காது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.





“எங்களிடம் இந்தக் கருவிகள் உள்ளன, அதை யாரும் இப்போது பெருமையாகப் பேச முடியாது. நாங்கள் தற்பெருமை காட்டப் போவதில்லை. தேவைப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தப் போகிறோம். அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இது தொடர்பான அனைத்து முடிவுக ளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன " என்று அவர் மேலும் கூறினார்.





புதிய நவீன அணு ஆயுதங்களைப் பயன்படுத் துவதற்கு ரஷ்யா தயங்காது என்பதையே புடின் தனது உரையில் வெளிப்படுத்தி யிருக்கிறார் என்று மேற்குலக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.





1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது நாஸி ஜேர்மனியைத் தோற்கடித்த வெற்றி நாளை ரஷ்யா மே 9 ஆம் திகதி கொண்டாடவுள்ளது. அதற்கு முன்பாக உக்ரைன் மீதான படையெடுப்பில் குறிப்பிடக் கூடிய பெரிய இராணுவ
வெற்றி ஒன்றை நிகழ்த்திக் காட்ட வேண்டிய அழுத்தம் மொஸ்கோ மீது அதிகரித்து வருகிறது. இதனால் மூன்று
மாதங்களை எட்டியுள்ள உக்ரைன் போரில் அடுத்துவரும் சில நாட்கள் மிகக் கடுமையானதாக இருக்கக் கூடும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.





-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.