அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார் - உடன் நிறுத்துமாறு யாழ். மாநகரசபை உத்தரவு

banner

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டு மதில் அனுமதியின்றி கட்டப்படுவதால், கட்டுமான பணியை உடனடியாக நிறுத்த யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளது.





கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நல்லூர் குறுக்கு வீதி பகுதியில் புதிதாக வீடொன்றை நிர்மணித்துள்ளார். அந்த வீட்டு மதில் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. எனினும், இதற்கான அனுமதி யாழ் மாநகர சபையில் பெறப்படவில்லையென
தெரிவிக்கப்படுகிறது.





யாழ் மாநகரசபை அமர்வு நேற்று நடந்த போது, இந்த மதில் விவகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந்த் எழுப்பினார்.





'உங்கள் கட்சியின் தலைவர் என்பதால் அவர் அனுமதியின்றி மதில் கட்டுவதை அனுமதித்துள்ளீர்களா?' என யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனை பார்த்து கேள்வியெழுப்பினார்.





‘எனக்கு இப்பொழுதும் அவர்தான் கட்சித்தலைவர். என்றாலும் அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதிக்க முடியாது. அதனால் அந்த கட்டுமான பணிகளை உடனடியாக இடைநிறுத்துவதுடன், முறைப்படியான அனுமதி பெற்று கட்டுமானத்தை தொடரும்படி அறிவியுங்கள்’ என மாநகரசபை உத்தியோகத்தர்களிற்கு முதல்வர் உத்தரவிட்டார்.