பிரதான கட்சிகள் பின்னடிப்பு! இழுபறியில் சர்வக்கட்சி அரசு!!

banner

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள், சர்வக்கட்சி அரசில் பங்காளியாவதற்கு பச்சைக்கொடி காட்ட மறுப்பதால், சர்வகட்சியை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.





இதனால் சர்வகட்சி அரசுக்கு பதிலாக சர்வகட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.





தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி, தவிர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஜனாதிபதி கலந்துரையாடி யோசனைகளை பெற்றுக்கொண்டுள்ளார்.





சர்வக்கட்சி அரசு தொடர்பில் பிரதமர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதுவும் தீர்வு இன்றி முடிவுக்கு வந்தது.





ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சில அரசியல் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் சில கட்சிகள் அமைச்சுப் பதவிகளைப் பெறாமல் ஆதரவு வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளன. சில அரசியல் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப் போகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உண்மைகளை விளக்கியுள்ளார்.





கட்சிகள் அளிக்கும் முன்மொழிவுகள் ஒவ்வொரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு, அதன் பிறகு அடுத்த வாரம் கருத்துகளை எடுத்து வேலைத்திட்டம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.