இலங்கையில் உச்சம் தொட்டது பணவீக்கம்!

banner
இலங்கையில் செப்டம்பர் மாதத்திற்கான உணவுப் பொருட்களின் விலைகள் 94.9 சதவீதமாக அதிகரித்துள்ளதென புள்ளி விபரங்கள் மற்றும் குடிசனம் மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் தொடர்பான புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டு அத் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொழும்பு பாவனையாளர் விலை சுட்டெண் படி மேற்கொள்ளப்பட்ட கணக்கீட்டின்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு சதவீதமாக இருந்தது. இம்மாதம் அது 94.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இறைச்சி, மீன், கருவாடு, காய்கறி, கிழங்கு, மற்றும் வெங்காயம் ஆகிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்ததே இதற்குக் காரணமென புள்ளி விபரங்கள் மற்றும் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.