எல்லைமீறி செயற்படுகிறது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை!

banner
இலங்கையில் பொருளாதாரக் குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரம்புக்கு மீறியவை என்பதாலேயே அதனை நாம் எதிர்க்க நேரிட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணைக்கும், நடைமுறைக்கும் அப்பாற்பட்டது என்பதே எமது நிலைப்பாடு. நமக்கான உள்நாட்டுப் பொறிமுறையைக் கண்டறிந்து ஒரு குற்றம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்பதை கண்டறிய ஏற்கனவே சிலர் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளனர். இந்த விடயங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஒன்றிணைக்கப்பட உள்ளன. எங்களின் கருத்துப்படி அது ஏற்றுக்கொள்ள முடியாதது, அதனால்தான் அதனை எதிர்த்தோம்." - என்றார்.