சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அம்பலப்படுத்துக!

banner
சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.

சீனாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் நாட்டின் பல்வேறு தொழில்துறைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அந்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் சபையில் அவர் வலியுறுத்தினார்.

" சில நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கியுள்ள அரசாங்கம் முதியோர் தினத்தன்று வங்கிகளில் முதியோர்களின் வைப்புக்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட 15 வீத வட்டியை முழுமையாக இல்லாமல் செய்துள்ளது.

முதியோர் தினத்தில் அவர்களுக்கு வழங்கிய பரிசைப் போன்றே இது உள்ளது. அவர்கள் தமக்குத் தேவையான மருந்துகளை வாங்குவதற்குக்கூட முடியாத நிலையில் வாழ்கின்றனர்.

கம்பனிகளுக்கு வரிச்சலுகைகளை வழங்கி தங்களின் சொந்தப் பணத்தை வங்கிகளில் வைத்திருக்கும் முதியோருக்கு இவ்வாறான நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் வங்கி வட்டி வீதத்தில் மாற்றங்களை மேற்கொண்டமையினால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறிய மற்றும் மத்திய தொழில்துறையினருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அநீதியானது." - என்றார் விஜித ஹேரத்.